பெண்களை ஆடுமாடுகள் போல் விற்றுத் தள்ளும் ISIS தீவிரவாதிகள்!

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சில பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர்.
தங்கள் பகுதியில் வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.
இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ‘செக்ஸ்’அடிமைகளாக வைத்துள்ளனர். இவர்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.
யாஷ்டி இன பெண்களை விலைபட்டியலிட்டு ஆடுமாடுகள் போல் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெறுகிறது. வயது வாரியாக பிரித்து விலைபட்டியலிட்டு உள்ளனர்.
40 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் 27 அமெரிக்க டாலர்
30 முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள் 48 அமெரிக்க டாலர்
30 முதல் 30 வயது வரை உள்ள பெணகள் 86 அமெரிக்க டாலர்
10 முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் 130 அமெரிக்க டாலர்
1 முதல் 9 வயது வரை உள்ள சிறுமிகள் 172 அமெரிக்க டாலர்
வாடிக்கையாளர்கள் துருக்கி, சிரியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர மற்றவர்கள் மூன்று பெண்களை மட்டும் வாங்க அனுமதிக்கப்படுகிறது.
பல பெண்கள் அவர்களது குடும்பத்தினருக்கே விற்கப் பட்டுள்ளனர்.
பிணைத் தொகை பெற்றுக் கொண்டு இவர்களை ஒப்படைக் கின்றனர். இந்த தகவலை குர்தீஸ் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் மிமோசினி தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment